Thursday, June 5, 2008

பங்குசந்தை

மும்பை : நேற்று மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி இருந்ததாலும், கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாலும் பங்கு சந்தையில் என்னவாகுமோ என்ற பயம் இருந்து வந்தது. ஆனால் எதிர்பார்த்ததை போல் இல்லாமல் இன்று ஏற்றத்தில் தான் பங்கு சந்தை முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 254.93 புள்ளிகள் உயர்ந்து 15,769.72 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 91.35 புள்ளிகள் உயர்ந்து 4,676.95 புள்ளிகளில் முடிந்துள்ளது.

No comments: